அஜித் குமாரின் 'விடா முயற்சி' அப்டேட்

21 Jul, 2024 | 11:01 AM
image

தமிழ் திரையுலகில் பொக்ஸ் ஓபீஸ் வசூல் நாயகனான அஜித்குமார் கதையின் நாயகனாக இரண்டு வித தோற்றத்தில் நடித்திருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் புதிய தகவல்கள் பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.  எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

தீபாவளி வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜூலை 23 ஆம் திகதி வரை அஜர்பைஜான் நாட்டிலும், அதன் பிறகு தொடர்ச்சியாக எட்டு நாட்கள் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கத்திலும் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்றும், ஓகஸ்ட் 15 ஆம் திகதி படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஓகஸ்ட் 15 ஆம் திகதியன்று படத்தின் வெளியீட்டு திகதியை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் சிங்கிள் ட்ராக் ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right