பொருத்தமற்ற நேரத்தில் அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் முனைப்புக்கு காரணம் தெரியவில்லை என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச

Published By: Digital Desk 7

21 Jul, 2024 | 12:19 PM
image

ஆர்.ராம்

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதில் தவறல்ல. ஆனால் பொருத்தமற்ற நேரத்தில் அச்செயற்பாட்டை முன்னெடுப்பதால் பொதுமக்கள் உட்பட அனைத்து மட்டங்களிலும் வீணான அச்சங்கள் உருவாகி குழப்பமான சூழல் உருவெடுக்கும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

22ஆவது திருத்தச்சட்டமூலத்தினை வர்த்தமானியில் அறிவிக்கும் செயற்பாட்டை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அச்செயற்பாட்டை நிறுத்துமாறு நீதி அமைச்சரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையின் தலைவர் என்ற அடிப்படையிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற அடிப்படையிலும் குறித்த திருத்தச்சட்டமூலத்தினை வர்த்தமானியில் வெளியிடும் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிவேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்ற விடயத்தில் எனக்கு எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையானது,  அதன் (ஆ) எனும் பந்தியில் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட என்னும் சொற்பதத்துக்கு பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தை சேர்க்கும் வகையிலேயே 22ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தினையும் நானும் இணைந்தே ஜனாதிபதியுடன் சமர்ப்பித்திருந்தேன். எனினும் இத்திருத்தத்தினை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை 22ஆவது திருத்த சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என்று தான் நீதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை,அரசாங்கத்தின் தலைவர் என்றவகையிலும்,  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையிலும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார். ஆத்திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் ஊடாக எந்த இலக்கினை அடையப்போகின்றார்.

அவருடைய முனைப்பு என்ன என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏன்னைப்பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கியுள்ளநிலையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றதொரு நடவடிக்கையாகும். ஆதன்காரணத்தினால் தான் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தினை வர்த்தமானியில் பிரசுரிக்கும் பணிப்பை விடுத்தேன்.

அதுமட்டுமல்ல, அரசியலமைப்பில் திருத்தத்தினை மேற்கொண்டு செனட் சபையை உருவாக்கும் யோசனையும் உள்ளது. அதனையும் அமைச்சரவையில் முன்னகர்த்தாதிருப்பதற்கு தீர்மானித்தேன்.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேர்தலை அண்மித்த காலப்பகுதிகளில் முயற்சிப்பதானது பொதுமக்கள் உட்பட அரசியல் தரப்பினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலையே உருவாக்கும். அந்த நிலைமையானது நாட்டில் வீணான குழப்பங்களை உருவாக்கும் என்பதே எனது நிலைப்பாடாகும். ஆகவே, தற்போது தேசிய தேர்தல்களுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் புதிய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அரசியலமைப்பு திருத்தங்களை முழுமையாக செய்வதே பொருத்தமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03