(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான பி குழு மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
உதேஷிக்கா ப்ரபோதனி, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் விஷ்மி குணரட்ன குவித்த அரைச் சதமும் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட ஷொர்ணா அக்தர் 25 ஓட்டங்களையும் ரபீயா கான் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷனி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதேஷிக்கா ப்ரபோதனி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி சமரி அத்தபத்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆனால், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்னவும் ஹர்ஷிதா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.
விஷ்மி குணரட்ன 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
கவிஷா டில்ஹாரி 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஆட்டநாயகி: விஷ்மி குணரட்ன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM