பால், பால்மா, பாற்பொருட்களால் ஏற்படும் லாக்டோஸ் இன்டோலரன்ஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

20 Jul, 2024 | 06:21 PM
image

இளம் பெற்றோர்கள் தங்களுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன், பால்மா மற்றும் பாற்பொருட்களையும் உணவாக வழங்குவதை காண்கிறோம். இத்தகைய பாற்பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு, வைத்தியரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றிருப்பார்கள்.   பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும், பெரியோர்களுக்கும், பால், பால்மா மற்றும் பாற்பொருட்களை சாப்பிடும் போது அதனால் பாதிப்பு ஏற்பட்டு, பல சங்கடங்களை எதிர்கொண்டிருப்பர்.  இந்நிலையில் இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சை இருக்கிறது என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, ஏப்பம், வாயு பிரிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு லாக்டோஸ் இன்டோலரன்ஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதலாம். 

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் இத்தகைய பாதிப்பிற்கு  உடனடியாகவும், முறையாகவும் சிகிச்சை பெறாவிட்டால்... சிறு குடலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும் இத்தகைய அறிகுறிகள் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு சில பிரத்தியேக பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள். பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு பால், பால்மா, பாற்பொருட்களை தவிர்க்கவும், அதனை குறைவாக பாவிக்கவும், வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள். மேலும் இத்தகைய பாதிப்பிற்கு பிறகு உங்களுடைய உணவு பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகளையும், சில காய்கறிகளை பற்றியும் மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

சில பிள்ளைகள் பால், பால்மா மற்றும் பாற்பொருட்களை அருந்தியவுடன் வயிற்றுப்போக்கு உண்டாகும். இதனை மருத்துவ மொழியில் லாக்டோஸ் இன்டோலரன்ஸ் என வகைப்படுத்துகிறார்கள். பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை எம்முடைய செரிமான மண்டலம் முழுமையாக ஜீரணிக்க இயலாது. இதன் காரணமாக அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காற்று பிரிதல், வயிறு வீக்கம் போன்ற பாதிப்பும், அசௌகரியமும் ஏற்படும். எம்முடைய சிறுகுடலில் உற்பத்தியாகும் லாக்டீஸ் எனும் நொதி சிலருக்கு உற்பத்தியாகாததாலும், சிலருக்கு இயல்பான அளவைவிட குறைவாக உற்பத்தியாவதாலும், இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். சிறு குடலில் சுரக்கும் இந்த நொதி மூலம்தான் நீங்கள் அருந்தும் பால் ஜீரணிக்கப்படுகிறது. இந்த என்சைம் எனும் நொதியின் உற்பத்தி குறைவாக இருப்பவர்களுக்கு தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. 

உண்டாகும். இதனை மருத்துவ மொழியில் லாக்டோஸ் இன்டோலரன்ஸ் என வகைப்படுத்துகிறார்கள். பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரையை எம்முடைய செரிமான மண்டலம் முழுமையாக ஜீரணிக்க இயலாது. இதன் காரணமாக அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காற்று பிரிதல், வயிறு வீக்கம் போன்ற பாதிப்பும், அசௌகரியமும் ஏற்படும். எம்முடைய சிறுகுடலில் உற்பத்தியாகும் லாக்டீஸ் எனும் நொதி சிலருக்கு உற்பத்தியாகாததாலும், சிலருக்கு இயல்பான அளவைவிட குறைவாக உற்பத்தியாவதாலும், இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். சிறு குடலில் சுரக்கும் இந்த நொதி மூலம்தான் நீங்கள் அருந்தும் பால் ஜீரணிக்கப்படுகிறது. இந்த என்சைம் எனும் நொதியின் உற்பத்தி குறைவாக இருப்பவர்களுக்கு தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

தொகுப்பு அனுஷா- வைத்தியர் ஸ்ரீதேவி 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17