எம் மண்ணில் பிறந்து பல்வேறு காரணங்களால் வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஏராளம். இவர்கள் அந்த மண்ணில் கடுமையாக உழைத்து பொருளாதார நிலையில் தன்னிறைவை விரைவில் எட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் மகிழ்ச்சி என்பது அதாவது அக மகிழ்ச்சி என்பது குறைவாகத்தான் இருக்கிறது. வேறு சிலருக்கு குறைந்து கொண்டே இருக்கிறது. தாயகத்தில் இருந்தபோது வருடம் ஒரு முறை குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொண்டு தங்களை ஆத்ம ரீதியாக புதுப்பித்துக் கொள்வார்கள். ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் போது அதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது.
மேலும் வெளிநாட்டில் உயர்கல்வி கற்பவர்களும்... வெளிநாட்டில் சிறிய அளவில் தொழில் தொடங்க விரும்புபவர்களும்... வெளிநாட்டில் ஏற்றுமதி உள்ளிட்ட தொழிலை தொடங்க வேண்டும் என விரும்புபவர்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வெற்றி என்பது கடினமாக இருக்கிறது. ஏனெனில் குலதெய்வ வழிபாடு இருந்தால்தான் நீங்கள் இறங்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் . சித்தி கிடைக்கும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேற எளிய பரிகாரத்தை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்குத் தேவையான பொருட்கள் மஞ்சள் தூள், வெற்றிலை, மகாலட்சுமி அம்சம் கொண்ட நாணயம் அல்லது அந்த நாட்டு பணம், சிறிதளவு மஞ்சள் வண்ண துணி அல்லது மஞ்சள் வண்ணக் காகிதம்.
வெற்றி பெற நினைப்பவர்கள் அவர்களது பிறந்த கிழமையை முதலில் தெரிவு செய்து கொள்ள வேண்டும். அந்த கிழமையில் இடம்பெறும் குரு ஓரை எனும் ஓரை நேரத்தை குறித்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய வீட்டின் கிழக்கு திசை நோக்கி ஒரு வாழை இலையையோ அல்லது ஒரு தாமிர தட்டையோ அல்லது பித்தளை தட்டையோ வைத்து அதில் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். அந்தப் பிள்ளையாருக்கு அந்த ஊரில் கிடைக்கும் வாசனையான மலர்களை சாற்ற வேண்டும். அதன் பிறகு ஒரு மஞ்சள் வண்ண துணியில் மூன்று வெற்றிலை மற்றும் 51& 101 என்ற எண்ணிக்கையிலான பணத்தை.. ரூபாயை..( மகாலட்சுமியின் ஆசி பெற வேண்டி) அதில் வைத்து மஞ்சள் பிள்ளையார் அருகில் வைத்து விட வேண்டும். அந்தத் தருணத்தில் தாயகத்தில் இருக்கும் உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து, 'மஞ்சள் பிள்ளையாராக வடித்திருக்கும் இறை சக்தியிடம்.. காரியத்தில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் விரைவில் தாய் மண்ணிற்கு திரும்பி குலதெய்வத்தையும், காத்தருளும் விநாயகர் பெருமானுக்கும் வஸ்திரம் சாற்றி பொங்கலை படைத்து வணங்குகிறேன்'' என பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இந்த பிரார்த்தனைக்கு பிறகு தான் நீங்கள் உங்களுடைய வெற்றிக்கான காரியத்தை தொடங்க வேண்டும். இப்படி தொடங்கிய காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். இதன் போது உங்களுக்கு நன்றாக தெரிந்த விநாயகரின் மந்திரங்களை உச்சரிக்கலாம். செல்போன் மற்றும் வேறு இலத்திரனியல் சாதனங்களிலிருந்து பக்தி பாடல்களையோ அல்லது மந்திரங்களையும் ஒலிக்க விடுவதையோ தவிர்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த விநாயகர் மந்திரத்தை மனமுருகி உச்சரிக்க வேண்டும். இப்படி செய்யும் போதுதான்.. நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற்று, வாழ்க்கையில் முன்னேறுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM