தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமிழ் மக்­க­ளிடம் இருந்து  தூர­மாக்கி விட வேண்­டு­மென்ற சதித் திட்­டங்­களை பேரி­ன­வாத சக்­திகள் மேற்­கொண்டு  வரு­கின்­றனர் என்­ப­தற்கு தகுந்த சான்று வடக்கு– கிழக்கில் வேலை­யற்ற  பட்­ட­தா­ரிகள் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் போன்­றோரின் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்­திற்கு சாத­க­மான பதிலை நல்­லாட்சி அர­சாங்கம் வழங்­காது ஏமாற்றி வரு­கின்­ற­மை­யாகும். 

இவ்­வாறு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கிழக்கு  மாகாண சபை உறுப்­பினர் எம். இரா­ஜேஸ்­வரன்  குறிப்­பிட்டார். திருக்­கோவில் பிர­தே­சத்­தி­லுள்ள கஞ்சி குடிச்­சாறு  கிராம மக்­க­ளு­ட­னான சந்­திப்பின் போது கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் எம். இரா­ஜேஸ்­வரன்  அங்கு மேலும் பேசு­கையில்; 

எமது மக்கள் கேட்­கின்ற விட­யங்­களை கிடப்பில் போட்டு விட்டு, கேட்­காத விட­யங்­களை வடக்கு, கிழக்கில் அரங்­கேற்றி, போரினால் அழி­வ­டைந்த எமது இனத்தை மது­வினால் அழித்து விட அர­சாங்கம் குறி­யாக உள்­ளது. அன்று வடக்கு, கிழக்கு வாழ் மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை  வழங்­கிய பல தொழிற்­சா­லை­களை மூடி­விட்டு மக்கள் விருப்­புக்கு முர­ணான முறையில் கல்­கு­டாவில் மது­பான உற்­பத்தி தொழிற்­சா­லையை நிர்­மா­ணிக்­கின்­றமை தமிழ்­பேசும் சமூ­கத்தை  அழித்­தொ­ழிக்கும் அரசின் சதி­யாகும். 

2015 ஆம் ஆண்டு பலத்த எதிர்­பார்ப்­புடன் ஆட்சி மாற்­றத்­தினை கொண்­டு­வர உழைத்த சிறு­பான்மை மக்­களை செல்லாக் காசாக பார்க்கும் அரசாங்கத்திற்கு எமது சிறுபான்மை மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.