சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

20 Jul, 2024 | 03:53 PM
image

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை கடந்த 05 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். 

பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. 

அக்களவிஜயத்தில் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள்சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த  08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள்  பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று எமது காரியாலயத்தில் இடம்பெற்றது.  

அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்டது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு   எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலுக்கு பின்வருவோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு 

02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு 

03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம் 

04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம் 

05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம் 

05.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10