பங்களாதேஷில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் ; இலங்கை மாணவர்கள் குறித்து விழிப்புடன் இருப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

20 Jul, 2024 | 02:33 PM
image

பங்களாதேஷில்  அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிராக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதனை அடுத்து  பங்களாதேஷ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இலங்கை மாணவர்கள் தொடர்பாக இந்தியாவிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் விழிப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் இருந்த 300 இந்திய மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற வன்முறையில் சுமார் 104 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 2,500 பேர் படுகாயமடைந்ததை அடுத்து பங்களாதேஷில் அதிகாரிகள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் அரைவாசிக்கும்  மேற்பட்டவர்களுக்கு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு இலக்கானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளியன்று பங்காளதேஷ் மாணவர்கள் தலைநகர் டாக்காவில் பொலிஸாரின் தடையை மீறி மாபெரும் பேரணிகளுடன் சிறைச்சாலையை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தனர். பேரணியையும் அமைதியின்மையையும் அடக்குவதற்கு பொலிஸார் போராடினர்.

வன்முறை சம்பவங்கள் டாக்காவில் மட்மல்ல 26 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் "அதிர்ச்சியூட்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் ஏப்பி செய்தி நிறுவனத்திடம்  கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right