வவுனியா பத்தியார் மகிளங்குளத்தில் நேற்று மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

பத்தியார் மகிளங்குளத்தில் வசிக்கும்  தங்களது வீட்டு வளாகத்தினை துப்பரவு செய்யும் பேது மோட்டார் குண்டு ஒன்று இருப்பதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். 

உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் குண்டை பார்வையிட்டதுடன், வவுனியா நீதிமன்ற அனுமதியுடன்  விஷேட அதிரடிப்படையினரை அழைத்து இன்று (09) மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

இவ் மோட்டார் குண்டு பாவனைக்கு உகந்ததல்ல எனவும் இது இறுதி யுத்தத்தில் போது புதைக்கப்பட்டிருக்கலாம் என விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.