(நெவில் அன்தனி)
மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டி அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது.
நேபாளத்திற்கு எதிராக வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் கடினமான வெற்றியை ஈட்டிய இலங்கை, வரவேற்பு நாடான மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற போட்டியில் 3 நேர் செட்களில் மிகவும் இலகுவாக வெற்றிபெற்றது.
நேபாளத்துடனான போட்டியின் முதல் செட்டில் 25 - 20 வெற்றிபெற்ற இலங்கை அடுத்த செட்டில் 24 - 26 என தோல்வி அடைந்தது.
எனினும் அடுத்த 2 செட்களை முறையே 25 - 11, 25 - 18 என்ற அடிப்படையில் தனதாக்கிய இலங்கை, போட்டியில் 3 - 1 செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மாலைதீவுகளுடனான போட்டியில் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.
முதல் இரண்டு செட்களில் தலா 25 - 9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இல்ககை, 3ஆவது செட்டில் 25 - 16 என இலகுவாக வெற்றிபெற்றது.
இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை இன்று சனிக்கிழமை (20) மாலை எதிர்த்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM