கொழும்பு - கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கொங்கஸ்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி இசுறு இந்திக மற்றும் அங்கொட பகுதியைச் சேர்ந்த மல்ஷா மதுவந்தி ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.