எம்மில் பலரும் ஆடி மாதம் வந்து விட்டால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபடுவர். வேறு சிலர் அருகில் இருக்கும் சிவாலயங்களில் சென்று அங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் அம்பாள் அல்லது அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவர்.
வேறு சிலர் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் தாயார் மற்றும் ஆண்டாளுக்கு வெண் மலரை சாற்றி வணங்கி வழிபடுவதை காண்கிறோம். அதே தருணத்தில் எம்முடைய குடும்பங்களில் உள்ள ஆண் உறுப்பினர்கள் அதாவது குடும்பத் தலைவர்கள் (வெளியில் சென்று வருவாய் ஈட்ட கூடியவர்கள்) இந்த பிறவியில் அறியாமல் பல பாவங்களை செய்து, அது தோஷமாக மாற்றம் பெற்றிருக்கும்.
அதனை ஜோதிடர்களால் கூட துல்லியமாக அவதானிக்க இயலாது. இதுபோன்ற சூட்சமமான தோஷங்களை அகற்றுவதற்கு ஆடி மாத பௌர்ணமியன்று சந்திர பகவானை வழிபட வேண்டும் என்று எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆடி பௌர்ணமி தினத்தன்று எம்முடைய வீடுகளில் உள்ள மொட்டை மாடி பகுதிக்குச் சென்று, மாலை 6:00 மணி அளவில் அல்லது அதற்கு மேல் கல்கண்டு பொங்கலை தயார் செய்து, நிலவாக ஜொலிக்கும் சந்திர பகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். இதனை மேற்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது குடும்ப தலைவர் அறியாமல் செய்திருக்கும் பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும்.
கல்கண்டு பொங்கல் பிரசாதத்தை எம்முடைய வீட்டிலிருந்து , திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்றிருக்கும் பெண்மணியை வீட்டிற்கு வரவழைத்து, சகோதரர்கள் வழங்கவேண்டும்.அத்துடன் அவர்களுக்கு பிடித்த பொருட்களை பரிசாகவும் வழங்க வேண்டும். புகுந்த வீட்டில் சென்று இல்வாழ்க்கை நடத்தும் பெண்கள் தங்களது தாய் வீட்டிற்கு ஆடி பௌர்ணமி தினத்தன்று வருகை தந்து நிலவொளியில் தயாரிக்கப்பட்ட கல்கண்டு பொங்கலை சாப்பிட்டு, அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கினால் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கி, வாசம் செய்து முன்னேற்றத்தை அருளுவாள்.
அதனால் ஆடி பௌர்ணமி வழிபாடு என்பது முக்கியமானது. ஆடி பௌர்ணமி வழிபாட்டினால் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாய தோஷங்கள் விலகி அவர்களது ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் விருத்தி அடையும். இதனால் ஆடி பௌர்ணமி தினத்தன்று சந்திர பகவானை வணங்கி அருள் பெறுவோம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM