(ஆர்.சேதுராமன்)
2024 இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவில் நடந்த போட்டிகளுக்கு மேலதிகமாக சுமார் 20 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில்,இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சியின் வருடாந்த மாநாட்டில் இது குறித்து ஆராயப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த மாதம் இப்போட்டிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இது.
இப்போட்டிக்காக நியூயோர்க் நகரில் 106 நாட்களில் கிரிக்கெட் அரங்கமும் நிர்மாணிக்கப்பட்டது.
எனினும், அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளுக்கு எதிர்பாராத வகையில் மேலதிகமாக பெருமளவு பணம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் போட்டிகளை நடத்துவதற்காக 40 முதல் 50 மில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என ஆரம்பத்தில் மதி;ப்பிடப்பட்டிருந்தது. நியூ யோர்க்கில் தற்காலிக அரங்கமொன்றை நிர்மாணிப்பதற்கு 30 மில்லியன் டொலர்களும் செயற்பாடுகளுக்கு 15 மில்லியன் டொலர்களும் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது என ஐசி.சி பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடைசிக் கட்டத்தில் இப்போட்டிகளை நடத்துவதற்கு மேலும் 20 மில்லியன் டொலர்கள் தேவை என ஐ.சி.சியின் வணிகப் பிரிவால் ஸ்தாபிக்கப்பட்ட 'ரி20 வேர்ல்ட் கப் யூ.எஸ்.ஏ. இன்கோர்பரேஷன்' எனும் நிறுவனம், மேலும் 20 மில்லியன் டொலர்களைக் கோரியது என அப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலைமை குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) பணிப்பாளர்கள் பலர் அதிருப்தியடைந்திருந்தனர் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி. வருடாந்த மாநாட்டில் இவ்விடயம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதகாவும் செய்தி வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஐ.சி.சியின் 108 அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த சுமார் 220 அதிகாரிகள் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருபது 20 உலகக் கிண்ணத் தொடரின் 55 போட்டிகளில் 16 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றன. அவற்றில் 8 போட்டிகள் நியூயோர்க்கில் நடந்தன. நியூயோர்க் ஆடுகளங்கள் குறித்து பல தரப்பிலும் அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024 இருபது20 உலகக் கிண்ண போட்டிகளை நடத்துவதில் முக்கிய பங்குவகித்த சுற்றுப்போட்டி பணிப்பாளர் கிறிஸ் டெட்லி, சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் பிரிவு பொதுமுகாமையாளர் கிளேயர் பர்லோங் ஆகியோர் கடந்த வாரம் இராஜினாமா செய்தனர். எனினும், இவர்களின் இராஜினாமா முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM