ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு றக்பி வீரர்கள் வீட்டுச் சிறைக்கு மாற்றம்

Published By: Digital Desk 7

19 Jul, 2024 | 03:10 PM
image

(ஆர்.சேதுராமன்)

ஆர்ஜென்டீனாவில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு றக்பி வீரர்கள் இருவரும் வீட்டுச் சிறைக்கு மாற்றப்படுவதற்கு ஆர்ஜென்டீன அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

ஒஸ்கார் ஜேகு (21), ஹியூகோ ஓ ராதோ (20) ஆகிய இரு வீரர்களும் ஆர்ஜென்டீன தலைநகர் புவனேஸ் அயர்ஸில் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

39 வயதான பெண்ணொருவரின் முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் தேசிய றக்பி அணி  தென் அமெரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டு, ஆர்ஜென்டீனா மற்றும் உருகுவே நாடுகளில் போட்டிகளில் பங்குபற்றியது.

ஆர்ஜென்டீனாவின் மெண்டோஸா நகரில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற றக்பி டெஸ்ட் போட்டியில் ஆர்ஜென்டீனாவை  28:13 புள்ளிகள் விகிதத்தில் வென்றதையடுத்து,  அன்றிரவு மெண்டோஸா நகரில் பிரெஞ்சு  அணியினர் தங்கியிருந்தனர்.

அன்;றைய இரவு ஆர்ஜென்டீன அணி வீரர்களான ஒஸ்கார் ஜேகு, ஹியூகோ ஓ ராதோ இருவரும் நகரிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து தன்னை இவ்விரு வீரர்களும் மோசமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர் என அப்பெண், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

அதையடுத்து,  இவ்விரு வீரர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மெண்டோஸா நகருக்கு ஆர்ஜென்டீன அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுமார் ஒருவார காலம் இவர்கள் இருவரும் தடுப்பு நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இவ்விருவரையும் வீட்டுக் காவலுக்கு மாற்றுவதற்கு ஆர்ஜென்டீன சட்ட மா அதிபர் அலுவலகம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (17) அனுமதி அளித்துள்ளது.

வீரர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைடுத்து அவர்கள் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களின் நடமாட்டத்தை  கண்காணிப்பதற்காக இலத்திரனியல் கண்காணிப்பு கருவியை அணிந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டால் இவ்விருவருக்கும் 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40