(நா.தனுஜா)
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் நோக்கம் மற்றும் பணிகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக பொதுமக்கள் அனைவரும் பார்வையிடக்கூடியவகையில் https://istrm.lk/ எனும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் மற்றும் அதனை முன்னிறுத்திய பணிகளை முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் பணிகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக பொதுமக்கள் பார்வையிடக்கூடியவகையில் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (17) பி.ப 2.00 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும், விசேட அதிதிகளாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி நிகழ்வில் உரையாற்றிய உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி அசங்க குணவன்ச, தமது செயலகத்தின் நோக்கம் மற்றும் பணிகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.
குறிப்பாக, 'கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைபு எம்மிடம் உள்ளது. இவ்வரைபானது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனான போதிய கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்டதா? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அது மிகக்கடினமானதாகும். இருப்பினும் இதன் உண்மை வரைபு 2016 - 2018 வரையான காலப்பகுதியிலேயே தயாரிக்கப்பட்டது. அதனைத் தயாரித்த சுயாதீன நிபுணர் குழுவானது ரமணி முத்தெட்டுவேகம தலைமையிலான ஆலோசனை செயலணியினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 7000 க்கும் மேற்பட்ட நேர்காணல்களின் உள்ளடக்கங்களை ஆராய்ந்து உள்வாங்கியது.
இருப்பினும் 2018 இல் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டபோது அச்சட்டவரைபை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கு எவரும் முன்வரவில்லை. அதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதை அடுத்து கடந்த 2022 ஒக்டோபர் மாதமளவில் நிலைமாறுகால நீதி செயன்முறை குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தார். அதனூடாகவே தற்போது இச்சட்டவரைபு சார்ந்த செயன்முறை அடுத்தகட்டத்துக்கு முன்நகர்த்தப்பட்டுள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று செயலகத்தின் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருவதாகவும், பாதிக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் கலாநிதி அசங்க குணவன்ச தெரிவித்தார்.
அதேவேளை இந்நிகழ்வில் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவுத் தலைவர் யுவி தங்கராஜா மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் உரையாற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM