அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் வாங்காமத்திலுள்ள பள்ளியொன்றில் இம்மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்தே திடீர் சுகவீனமடைந்தனர்.

இதன் பிறகு இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர்  சுகயீனமுற்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த நிகழ்வில் சமயலில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்து, நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அம்பாறை நீதவான் இவர்களை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

எனினும் குறித்த சந்தேக நபர்கள் குறித்த பிணையை முன்வைக்க முடியாததால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.