தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா என்பதும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சிலர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்தபோதே உயர் நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை பல நாட்கள் தொடர்ந்த நிலையில், அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்றம் மனுக்களை நேற்று வியாழக்கிழமை (18) இரவு 8:50 மணிவரை விசாரணை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM