வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதந்காக 7 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விவசாய செயற்பாடான தேசிய புத்தரிசி விழா நேற்று (08)  வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ஜய ஶ்ரீ மகாபோதி வளாகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் குறித்த நிவாரணத் தொகையானது எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.