யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் ; அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை - வைத்தியர் அர்ச்சுனா

Published By: Digital Desk 3

19 Jul, 2024 | 10:00 AM
image

யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன் என  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன முற்றுப்புள்ளி வைத்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.

இதன் போது இராமநாதன் அர்ச்சுனா இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. தென்மராட்சி மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன்

யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்.

அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன்.

சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்றைய திகதியிட்டு இன்றைய தினம் எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது.

கொழும்பு சென்று நாளை அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33