(நா.தனுஜா)
இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு 15 வருடங்களுக்கு 85 சதவீத வரி விலக்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தாய்லாந்துடன் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இலங்கை பகிரங்கப்படுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் இவ்வொப்பந்தம் நடைமுறைக்கும் வரும்போது ஏற்றுமதிகளுக்கான 50 சதவீத வரி விலக்களிப்பைப் பெறக்கூடிய சாத்தியம் உள்ள போதிலும், ஏற்றுமதிகளில் 15 சதவீதமான பொருட்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
அதேவேளை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உயர் இலாபத்தைப் பெற்றுத்தரக்கூடியவகையில் மேற்குறிப்பிட்ட 15 சதவீதமான பொருட்கள் இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குள் சேர்க்கப்படும். அத்தோடு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கில் இவ்வொப்பந்தத்தில் கார் போன்ற இறக்குமதிகளுக்கு இலங்கை வரி விதித்துள்ளது.
அதேபோன்று இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பிரகாரம் 50 சதவீத வரி விலக்களிப்புக்கு அப்பால், எஞ்சிய 30 சதவீத வரி விலக்களிப்பானது அடுத்துவரும் 15 வருடகாலத்தில் ஒவ்வொரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM