(நெவில் அன்தனி)
கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட கோல் மார்வல்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மிகவும் பரபரப்பான நீக்கல் போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை எதிர்த்தாட கண்டி பெல்கன்ஸ் தகுதிபெற்றது.
முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆகியோரின் திறமையான துடுப்பாட்டம், ட்வெய்ன் பிரிட்டோரியர்ஸின் 4 விக்கெட் குவியல் என்பன கோல் மார்வல்ஸின் வெற்றியை இலகுவாக்கின.
மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது நிரோஷன் டிக்வெல்ல (9) ஆட்டம் இழந்தார்.
எனினும் டிம் சீபேர்ட் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அலெக்ஸ் ஹேல்ஸுடன் 2ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் ஜனித் லியனகேவுடன் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் பகிர்ந்து கோல் மார்வல்ஸை வெற்றி அடையச் செய்தார்.
டிம் சீபேர்ட் 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஜனித் லியனகே 56 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் மெண்டிஸ், ரைலி ரூசோவ் ஆகிய இருவரும் 2ஆவத விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களையும் ரைலி ரூசோவ் 40 ஓட்ங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றதுடன் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் இசுறு உதார 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM