பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்பவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
"பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து, இவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இவர் “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய உதவியாளராவார்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி அன்று துபாய்க்கு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM