1350க்கும் மேற்பட்ட உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

Published By: Digital Desk 7

18 Jul, 2024 | 05:00 PM
image

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

அவர்களால் எவ்வித வெற்றிகரமான நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான  செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று  உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.

ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில்  நிரந்தர நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஒன்பது மாகாணத்திலும்  உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து பிரச்சினைகள் இருந்த போதும்  கிழக்கு மாகாண ஆளுநர் இதுக்குறித்து அதிகம் கவனம் செலுத்தி ஒரே நாளில் இந்நியமனங்களை வழங்கி வைத்தமை  என்பது பாராட்டுகிரியது  என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10 வருடமாக காணப்பட்ட தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஒரு வருடக் காலத்திற்குள் பெற்றுத்தந்த ஆளுநருக்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01