(ஆர்.சேதுராமன்)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மார்க் வூட் இணைக்கப்பட்டுள்ளார். இத்தொடரின் முதலாவது போட்டியுடன் ஓய்வு பெற்ற ஜேம்ஸ் அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ட்ரெண்ட் பிரிட்ஜில் இன்று வியாழக்கிழமை (18) இரண்டாவது போட்டி ஆரம்பமாகவுள்ளது.
அண்டர்சனுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் வூட் இணைக்கப்பட்டமை மாத்திரமே இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் செய்யப்பட்ட ஒரேயொரு மாற்றமகும்.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து ஓல் இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது.
அப்போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றிய அண்டர்சன், 704 டெஸ்ட் விக்கெட்களுடன் ஓய்வு பெற்றார். முத்தையா முரளிதரன், ஷேன் வோர்னுக்கு அடுத்ததாக ஆகக் கூடுதலான டெஸ்ட் விக்கெட்களை கைபற்றிய வீரராக அண்டர்சன் விளங்குகிறார்.
இதேவேளை, 34 வயதான மார்க் வூட், கடந்த மாதம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடினார்.
இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் 108 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் இறுதியாக தரம்சாலாவில் நடந்த இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் பங்குபற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM