(ஆர்.சேதுராமன்)
ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் கைஷு சனோ, பாலியல் வன்முறை குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான கைஷூ சனோ, மத்திய கள வீரர் ஆவார்.
சனோவும் அவரின் நண்பர்கள் இருவரும் டோக்கியோ நகரிலுள்ள ஹோட்டலொன்iறில் வைத்து பெண்ணொருவருக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்பெண், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கைஷூ சனோ, கட்டாரில் அண்மையில நடைபெற்ற ஆசிய கிண்ண போட்டிகளுக்கான ஜப்பானிய குழாமிலும் இடம்பெற்றிருந்தார்.
ஜப்பானின் கஷீமா அன்ட்லெர்ஸ் கழகத்தின் சார்பில் விளையாடி வந்த அவர், ஜேர்மனியின் மைன்ஸ் கழகத்தில் இம்மாத முற்பகுதியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
சனோ குறித்த செய்திகள் குறித்து தான் வியப்படைவதாக மைன்ஸ் கழகம் தெரிவித்ததுடன், போதிய தகவல்கள் இல்லாதமை காரணமாக இது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனது முன்னாள் வீரர் தொடர்பான செய்திகளால் தான் கவலையடைவதாக கைஷிமா கழகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM