(நெவில் அன்தனி)
ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலைதீவுகள் கரப்பந்தாட்ட சங்கம் முன்னின்று நடத்தும் 20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாகும் குறிக்கோளுடன் இலங்கை கரப்பந்தாட்ட அணி பங்குபற்றவுள்ளது.
மாலைதீவுகள் சென்றடைந்துள்ள இலங்கை அணி அங்கு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு நாடுகள் மோதும் இந்த கரப்பற்தாட்டப் போட்டி மலைதீவுகளின் தலைநகர் மாலேயில் அமைந்துள்ள சோஷியல் சென்டர் அரங்கில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை, கிர்கிஸ்தான், நேபாளம், வரவேற்பு நாடான மாலைதீவுகள் ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றுகின்றன.
இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் நேபாளத்தை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இப்போட்டி இன்று இரவு 9.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 19ஆம் திகதி மாலைதீவுகளை பிற்பகல் 4.00 மணிக்கு எதிர்த்தாடும் இலங்கை, தனது கடைசிப் போட்டியில் கிர்கிஸ்தானை சனிக்கிழமை எதிர்த்தாடும்.
ஜூலை 22 ஆம் திகதி அரை இறுதிப் போட்டிகளும் 23ஆம் திகதி 3ஆம் இடத்தைத் தீர்மாணிக்கும் போட்டியும் சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியும் நடைபெறவுள்ளன.
இப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணிக்கு சத்துரி பூர்ணிமா தலைவியாகவும் அமில எரங்க விஜேபால அணியின் தலைமைப் பயிற்றுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி
சத்துரி பூர்ணிமா (தலைவி), தில்கி நெத்சரா, ஹிமாயா பாரிந்தி, செசாந்தி ருவன்யா, வத்ஷிகா தில்ஷானி, சுலக்ஷிகா பசிதுனி, பவனி பபசரா, நெத்மி திவ்யாஞ்சலி, நித்யா மிந்துலி, விமன்ஷா ப்ரபானி, பூஜா அத்தநாயக்க, ஹர்ஷனி நிசன்சலா.
தலைமை பயிற்றுநர்: அமில எரங்க, உதவிப் பயிற்றுநர்: ஹஷான் தமித், உடற்பயிற்சி ஆலோசகர்: இஷன்கா பாலசூரிய, முகாமையாளர்: ஐ. சமரக்கோன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM