மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ் போட்டியில் இலங்கைக்கு 3 தங்கங்கள் உட்பட 13 பதக்கங்கள்

18 Jul, 2024 | 03:54 PM
image

(நெவில் அன்தனி)

வஸ்கடுவ, சைட்ரஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு (Blitz) செஸ் போட்டியில் இலங்கை 3 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தது.

10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் செனித்த சிஹாஸ் தின்சார கருணாசேன, சாத்தியமான 9 புள்ளிகளில் 8.5 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான  பிரிவில் FIDE மாஸ்டர் தேவிந்தியா ஓஷினி குணவர்தன 8 புள்ளிகளுடன் தோல்வி அடையாதவராக தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அவரை விட 12 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் வினுகா திஹைன் 8 புள்ளிகளை தோல்வி அடையாதவராக தங்கத்தை வென்றெடுத்தார்.

அவர்களை விட மேலும் 10 சிறுவர், சிறுமியர் இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுத்தனர்.

8 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் எஸ் நெதுமி திஹன்சா பெரேரா (வெண்கலம்), 8 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் ஜனிரு நெத்மித்த (வெள்ளி), துலெய்ன் தேனுல அம்பகஹவத்த (வெண்கலம்), 10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் லோஹாஸ் தேவ்மினா ரோட்றிகோ (வெள்ளி), தெஹாஸ் ரித்மித்த கிரிங்கொட (வெண்கலம்), 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் தருலி திஹன்ச சேனாரத்ன (வெண்கலம்), 14 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் ஜீ. கல்கொடுவ (வெண்கலம்), 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் எம். எசந்தி நிவன்சா (வெள்ளி), கெஹன்சா ரனுமி டாங்கே (வெண்கலம்) 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தெஹன்சா நிசந்துனி சந்தநாயக்க (வெண்கலம்) ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.

10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் இலங்கை தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றமை விசேட அம்சமாகும்.

இந்த செஸ் போட்டியில் இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றதுடன் கஸக்ஸ்தான், இலங்கை ஆகியன  தலா 3 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ்...

2025-06-22 04:44:46
news-image

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜய்ஸ்வால்,...

2025-06-21 01:39:48
news-image

பில்லி ஜீன் கிங் கிண்ண மகளிர்...

2025-06-20 20:44:06
news-image

ஒன்லைனில் இலங்கை - பங்களாதேஷ் மட்டுப்படுத்தப்பட்ட...

2025-06-20 19:59:25
news-image

கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ...

2025-06-20 19:55:59
news-image

இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல்...

2025-06-20 13:21:50
news-image

நான்காம் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை...

2025-06-20 12:34:21
news-image

பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன்...

2025-06-19 20:53:21
news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 21:34:57
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18
news-image

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின்...

2025-06-19 05:54:08