நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நல்லதண்ணி நகரிலுள்ள வரத்தக நிலையங்களில், இன்று மதியம் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, 3 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 4 வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இச்சுற்றிவளைப்பில், 38 வியாபார நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.