(நெவில் அன்தனி)
எட்டு நாடுகள் பங்குபற்றும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை மகளிர் அணியில் 15 வயதான சுழல்பந்துவீச்சாளர் ஷஷனி கிம்ஹானி வைத்யரத்னவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரத்கம தேவபத்திராஜ வித்தியாலய மாணவியான ஷஷனி, 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்துவிசியதை அடுத்து அவர் சிரேஷ்ட அணியில் இடம்பிடித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற மகளர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சிரேஷ்ட அணியில் அறிமுகமான அவர் இப்போது நிரந்தரமாக அணியில் இடம்பிடித்துவருகிறார்.
இலங்கை மகளிர் அணியின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட வீராங்கனைகள் பலர் இலங்கை அணியில் இடம்பெறும் அதேவேளை சில இளம் வீராங்கனைகளும் 15 வீராங்கனைகள் கொண்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.
பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா டில்ஹானி, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி, அச்சினி குலசூரிய, இனோஷி ப்ரியதர்ஷனி, காவியா காவிந்தி, சச்சினி நிசன்சலா, ஷஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM