பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார் - சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

Published By: Vishnu

17 Jul, 2024 | 05:49 PM
image

(நா.தனுஜா)

தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று செயற்படுவதாகவும், இது பொலிஸார் மத்தியில் வலுவடைந்திருக்கும் அரசியல்மயமாக்கலைக் காண்பிப்பதாகவும்  சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 தொழிற்சங்க நடவடிக்கைகள் புற்றுநோயைப் போல சமூகத்தின் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்திவருவதாக அண்மையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இக்கருத்து தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அரச அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி பொதுவான அல்லது அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதன் மூலம் ஓர் அரசியல்வாதியைப்போன்று செயற்படுகிறார் எனவும், இது பொலிஸார் மத்தியில் வலுவடைந்துள்ள அரசியல்மயமாக்கலைக் காண்பிக்கிறது எனவும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 'சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதும், பொலிஸார் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைப் பின்பற்றி செயற்படுவதை உறுதிப்படுத்துவதுமே பொலிஸ்மா அதிபரின் கடமையாகும். ஆனால் பொலிஸார் மனித உரிமைகளை மீறியும், சட்டம், ஒழுங்கைப் புறந்தள்ளியும் செயற்படும் சூழ்நிலையில் பொலிஸ்மா அதிபர் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதானது எவ்வகையிலும் அவரது கடமைக்கு உட்பட்ட செயலன்று. மாறாக இது அவர் அவரது கடமையை நிறைவேற்றுவதற்குத் தவறியிருப்பதையே காண்பிக்கின்றது' எனவும் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 அத்தோடு அண்மையகால தொழிற்சங்க நடவடிக்கையை நியாயப்படுத்துவது அல்லது அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒருபுறமிருக்க, தொழிற்சங்கத்தை உருவாக்குவதும், அதில் அங்கம் வகிப்பதும், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதும் அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் எனத் தெரிவித்துள்ள அவர், கருத்திற்கொள்ளப்படாமல் இருந்த  தொழிலாளர் உரிமைகள் தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாகவே வென்றெடுக்கப்பட்டன என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20