திருப்பதிக்கு எப்போது செல்ல வேண்டும்

Published By: Digital Desk 7

17 Jul, 2024 | 05:32 PM
image

எம் மண்ணில் ஆட்சி செய்யும் அதிபர்கள் பதவி ஏற்றவுடனோ அல்லது இந்தியாவிற்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தவறாமல் திருப்பதிக்கு சென்று ஏழுமலை வெங்கடேச பெருமாளை தரிசித்து விட்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசியல்வாதிகளும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு வருகிறார்.

அதே தருணத்தில் சில ஆன்மீக பெரியோர்கள் திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளை சில லக்னத்துக்காரர்கள் சில நட்சத்திரக்காரர்கள் சென்று தரிசிக்க கூடாது என்றும் , அப்படி தரிசித்தால் சுப பலன்களை விட அசுப பலன்கள் தான் கிடைக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இதனால் எம்மில் பலரும் திருப்பதிக்கு யார் செல்ல வேண்டும்? எப்போது செல்ல வேண்டும்? எந்த நாளில் செல்ல வேண்டும்? என்ற அடுக்கடுக்கான வினாக்களை சோதிட நிபுணர்களிடமும், ஆன்மீக பெரியோர்களிடம் தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள்.

சந்திர பகவானின் பரிபூரண ஆற்றல் நிரம்பிய திருப்பதி எனும் வைணவ தலத்திற்கு அனைவருமே செல்லலாம். இதில் எந்த தடையும் கிடையாது.

மேலும், இந்த ஆலயத்திற்கு பௌர்ணமி நாட்களிலும், திங்கட்கிழமைகளிலும் அனைவரும் செல்லலாம். ஜாதகத்தில் திருப்பதி சென்று வந்தால் சங்கடங்கள் ஏற்படும் என அவதானித்தவர்கள் கூட பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் ஏழுமலையானை தரிசித்தால் சுப பலன்கள் தான் கிட்டும்.

பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமை என இரண்டு நாட்களில் இங்கிருந்து ஆகாய விமான மூலமாகவோ அல்லது முன்னதாக இங்கிருந்து கிளம்பி சென்னைக்குச் சென்று, அங்கிருந்து திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.

மேலே சொன்ன இரண்டு நாட்களிலும் 12 லக்னக்காரர்களும், 27 நட்சத்திரக்காரர்களும் சென்று தரிசனம் செய்யலாம். வேறு நாட்களில் தரிசனம் செய்ய விரும்புபவர்கள் தங்களது ஜாதகத்தில் திருப்பதிக்கு சென்று வந்தால் சுப பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட நிபுணரிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பிறகு செல்லலாம்.

அதே தருணத்தில் திருப்பதி சென்று வர வேண்டும் என விரும்புவர்களுக்கு உடனே வாய்ப்புகள் கிடைப்பதில்லை. திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என விரும்புபவர்கள் முதலில் தங்களது வீட்டுக்கு அருகே உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சனிக்கிழமைகளில் சென்று துளசி மாலையை சாற்றி,' திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை சமர்ப்பணம் செய்யுங்கள்.

சனிக்கிழமைகளில் ஏழுமலையானை தரிசிக்க விருப்பம் கொண்டு விரதம் இருந்தாலும் மூன்று மாதத்திற்கு உள்ளாக திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.‌ வேறு சிலர் திருப்பதிக்கு சென்று வர விரும்பினால் உங்களது வீட்டுக்கு அருகே உள்ள பெருமாள் ஆலயத்திற்கு பச்சரிசியை தானமாக கொடுத்து வந்தாலும் உங்களுடைய கோரிக்கை நிறைவேறும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33
news-image

வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சித்தர்கள் வழங்கிய...

2024-08-23 20:09:49
news-image

சகல கர்மா தோஷங்களையும் நீக்கும் எளிய...

2024-08-21 17:45:17