தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சட்னி சாம்பார்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சட்னி சாம்பார்' எனும் இந்த இணைய தொடரில் யோகி பாபு, வாணி போஜன், 'கயல்' சந்திர மௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, காயத்ரி ஷான், தீபா சங்கர், மைனா நந்தினி , சம்யுக்தா விஸ்வநாத், ஆர். சுந்தர்ராஜன், குழந்தை நட்சத்திரங்கள் இளன், அகிலன், கேசவ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜேஷ் அசோக் இசையமைத்திருக்கிறார். இந்த இணைய தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிற்றல் தளத்திற்காக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 26 ஆம் திகதியன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகும் இந்த இணைய தொடரின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.
இதில் வழக்கம் போல் இயக்குநர் ராதா மோகன் தன்னுடைய ஃபேவரைட்டான உறவு குழப்பத்தை மையப்படுத்தி, அழகான- நேர்த்தியான- ஃபேமிலி என்டர்டெய்னர் தொடரை வழங்கி இருக்கிறார் என தெரிய வருகிறது. இது டிஜிற்றல் தள ரசிகர்களுக்கு உற்சாகமான தொடராக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM