சமூகமும், உலகமும் எப்போதும் போட்டித்தன்மை கொண்டவையாகும். எப்போதும் போட்டி நிலவிக்கொண்டே இருக்கும். இதை கையாளக்கூடிய ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க வேண்டும். போட்டி முறைமையில் பல்வேறு உத்திகள் முன்னெடுக்கப்படும். அதனை கையாளும் போது போட்டித் தன்மையில் வரம்புகளை அறிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து போட்டிகளிலும், நாட்டின் தேசிய நலனை முதன்மைப்படுத்தும் வகையில் அந்த கொடுக்கல் வாங்கல்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்கள் போட்டித்தன்மையையும் தந்திரம், உத்தி, புத்திசாலித்தனம், மற்றும் அறிவை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டாலும், இன்று இந்நாட்டின் தேசிய நலனுக்கும் மக்களுக்கும் எதிராகவே இந்த சதிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களை ஏமாற்றும், அவதானங்களை திசை திருப்பும், பொய்யான தகவல்களை பரப்பி, நாடு சீரழிந்தாலும் தமது பதவிகளை பாதுகாத்துக் கொள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டிலும் சமூகத்திலும் நிச்சயமற்ற நிலை, குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நடக்க வேண்டியவை நடக்குமா, நடக்காதா என்பது தொடர்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.
ஜனநாயகத்தையும் தேசிய தேவைப்பாட்டையும் மறந்து, தங்கள் சொந்த நலன்களையும், தமது பதவிகளையும் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு தரப்பினரும் செயற்பட்டு வருவதே இதற்கு காரமணமாகும். தங்கள் பேராசை பிடித்த வாழ்க்கை முறையைத் தக்க வைத்துக் கொள்ள நாட்டையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் விற்கத் தயாரான ஆட்சியாளர்களும் இன்று இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசியலமைப்பை அழிக்கவும், அதனை மீறவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வங்குரோத்தான நாட்டில் கூட, தெளிவின்மை மூலம் நாடு குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களுடன் விளையாடி, தவறான புரிதலை ஏற்படுத்தி, நாட்டை குழப்பமடையச் செய்துள்ளனர். எனவே இவ்வாறான பொய்யான தோற்றப்பாடுகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை எவராலுமே மீற முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 326 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன பொலன்னறுவை, திம்புலாகல, அரலகங்வில, விலயாய ஆரம்பப் பிரிவுப் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 16 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
யார் அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் சரி, யார் பலம்படைத்தவராக இருந்தாலும் சரி, அரசியலமைப்புச் சட்டம்தான் உயரிய சட்டமாகும். எனவே ஏமாற்றும் நடவடிக்களைகளை முன்னெடுக்காது தற்போது நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. இலங்கையை முதல்தர நாடாக ஆக்க சதிகளை மேற்கொண்டு முயற்சித்தாலும் பராவாயில்லை. இன்றோ ஆட்சியாளர்களின் பதவிகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த சதிகள் நடந்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்புபவர்களினது இயலாமையினாலயே இவ்வாறான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரதேச செயலகப் பிரிவுகளை மையமாகக் கொண்டு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பித்து, ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். ஸ்மார்ட் விவசாயத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட டொலர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM