உன்னதமான உள்ளூர் வங்கியான பான் ஏசியா வங்கி, இலங்கையின் முன்னணி மனைச் சொத்து (ரியல் எஸ்டேட்) ஒப்பந்ததாரரும் அபிவிருத்தியாளரும் பொறியியல் தீர்வுகள் வழங்குநருமான வரையறுக்கப்பட்ட ஐசிசி தனியார் நிறுவனத்துடன் (ICC பிரைவேட் லிமிடெட்) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MOU) கையெழுத்திட்டதை பெருமையுடன் அறிவிக்கிறது.
இந்தத் திட்டம் பான் ஏசியா வங்கியின் வீட்டுக் கடன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மனைச் சொத்து (ரியல் எஸ்டேட்) கொள்வனவுகளுக்கான நிதிவசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதுடன் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறும், புதிய தீர்வுகள் வாயிலாக நிதித் தேவைகளுக்கான அணுகலை எளிதாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பான் ஏசியா வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க இந்த கூட்டாண்மை பற்றி கருத்து தெரிவிக்கையில்,
"கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி வகிக்கும் ஐசிசியின் திறன்களுடன் எங்கள் நிதி நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைத்து, எமது வங்கியின் வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் எளிதான நிதி உதவியை வழங்க முடியும்" என்றார்.
ஐசிசியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நாமல் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
"தரம் மற்றும் முற்போக்கான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கும் பான் ஏசியா வங்கியுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் நாங்கள் எங்களது சிறந்த திட்டங்களை தடைகளின்றி முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், அத்திட்டங்கள் மூலம் எங்கள் இருதரப்பு வாடிக்கையாளர்களுக்கும் மிகச் சிறந்த பலாபலன்களை பெற்றுத்தர முடியும்" என்றார்.
வங்கி காப்பீடு, பணப் பட்டுவாடா மற்றும் வீட்டுக் கடன்களுக்கான பிரதம முகாமையாளர் யோஹான் ஈபெல் கூறுகையில்,
"எங்கள் வீட்டுக் கடன்கள் நெகிழ்வான மற்றும் போட்டித்தன்மையுள்ள நிதி தீர்வுகளை வழங்குவதற்கான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு உரிமங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். எங்களது இந்தக் கூட்டாண்மை மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்பும் ஏராளமானவர்கள் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்" என்றார்.
1980ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 40 வருடங்களுக்கும் மேலான பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள இன்டர்நெஷனல் கன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் (ICC), தனித்துவமான சேவை, அனுபவம் வாய்ந்த பணியாளர்களையும், மிகச் சிறந்த இயந்திரங்களையும், உபகரணங்களையும் கொண்டிருக்கும், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ் பெற்ற சிவில் பொறியியல் நிறுவனமாகவும், உயர்தர மூலப்பொருட்கள் மூலம் கட்டுமானப் பணிகளை சரியான நேரத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றும் நிறுவனமாகவும் நிலைத்து நிற்கின்றது.
தனது வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான வங்கிச் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ள, பான் ஏசியா வங்கியானது துரிதகதியில் வளர்ந்து வரும் புகழ்பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றாக சாதனை படைத்து வருகிறது. அதே சமயம், தனது உயர்ந்த இலட்சியம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் பாரம்பரிய விழுமியங்களுக்கு ஆதரவளிக்கும் தனித்துவமான நற்பெயரையும் கலாச்சாரத்தையும் பேணி வருகின்றது. உன்னதமான உள்ளூர் வங்கியாகப் பெயர் பெற்றுள்ள பான் ஏசியா வங்கி தனது வர்த்தக இலச்சினையின் தாற்பரியத்தைத் தொடர்ந்தும் காப்பாற்றிக்கொள்ள அயராது பாடுபட்டு வருகிறது.
இடமிருந்து வலமாக:
ஐசிசி - பிரபஞ்சன அபேதீர - விற்பனை நிர்வாகம், ஜனக பிரதீப் - விற்பனைப் பிரிவு பிரதானி, பிரியஷான் சமரசிங்க - விற்பனைப் பிரிவு பிரதானி , ரந்துல ஜயசூரிய - சந்தைப்படுத்தல் பிரதானி, ரோஷானி பெரேரா - சொத்து பொது முகாமையாளர், நளின் பெர்னாண்டோ - பணிப்பாளர் நிதி, நாமல் பீரிஸ் - நிறைவேற்றுப் பணிப்பாளர், பான் ஏசியா வங்கி, நளீன் எதிரிசிங்க – பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, கயநாத் டி சில்வா – பிரதிப் பொது முகாமையாளர் – கடன், ஷியான் பெரேரா – உதவிப் பொது முகாமையாளர் – சில்லறைக் கடன், யோஹான் ஈபெல் – பிரதான முகாமையாளர் – வங்கி காப்புறுதி, மற்றும் பணப் பட்டுவாடா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM