உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் மூன்று மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் பதிவுசெய்திருந்த அவர், “எனது உதவியாளர்களுக்கு நன்றி. வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பினேன். நுரையீரல் முழுவதும் புகை. மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தப்பினேன். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். யாருக்கும் காயமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவை அவர் சரியாக அதிகாலை 3.25 மணிக்குப் பதிவுசெய்திருந்தார்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.