மதுபான போத்தலால் அரச பஸ் மீது தாக்குதல் ; பயணி ஒருவர் காயம்!

Published By: Digital Desk 7

17 Jul, 2024 | 11:27 AM
image

மதுபான போத்தலால் அரச பஸ் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16)  இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா வீதிக்குரிய ND-9941 இலக்க பஸ் மீது இவ்வாறு தாக்குதல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பஸ் காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபரை   பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால்  பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளதோடு  சாரதி  பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பஸ்ஸை நிறுத்தியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தறையில் 10 வாள்களுடன் ஒருவர் கைது

2024-09-18 16:05:42
news-image

தணமல்விலவில் 3,570 கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-09-18 15:37:36
news-image

விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் மக்கள்...

2024-09-18 15:08:39
news-image

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை :...

2024-09-18 13:49:11
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய...

2024-09-18 15:27:37
news-image

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை!

2024-09-18 12:59:14
news-image

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை...

2024-09-18 14:14:05
news-image

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி ;...

2024-09-18 13:47:40
news-image

நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த...

2024-09-18 12:51:06
news-image

பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு...

2024-09-18 12:48:19
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-09-18 12:37:33
news-image

பஸ்ஸில் ஏற முயன்ற பெண் சில்லுக்குள்...

2024-09-18 12:57:31