bestweb

வெற்றிபெற்றும் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தம்புள்ள; கடைசி அணியாக இறுதிச் சுற்றில் நுழைந்தது கண்டி பெல்கன்ஸ் 

Published By: Vishnu

16 Jul, 2024 | 11:43 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் கடைசி லீக் போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்ர்ஸ் அணியை எதிர்த்தாடிய தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஆனால், போதிய நிகர ஓட்ட வேகத்தைப் பேணத் தவறியதால் இறுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை தம்புள்ள சிக்ஸர்ஸ் இழந்தது.

இப் போட்டி முடிவை அடுத்து கண்டி பெல்கன்ஸ் கடைசி அணியாக லங்கா பிறீமியர் லீக் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தம்புள்ள சிக்ஸர்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணித் தலைவர் மொஹமத் நபி 40 ஓட்டங்களையும் சமிந்து விக்ரமசிங்க 26 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

அவர்கள் இருவரைவிட நுவனிது பெர்னாண்டோ (15), துஷான் ஹேமன்த (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 18.1 ஓவர்களில் சகல  விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ், ஏஞ்சலோ பெரேரா ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த மொஹமத் வசீம், க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தனர்.

அதனைத் தொடர்ந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்துகொண்டிருக்க, அணித் தலைவர் திசர பெரேரா தனி ஒருவராக தனது அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவர் 30 ஓட்டங்களைப் பெற்ற கடைசியாக ஆட்டம் இழக்க தம்புள்ள சிக்ஸர்ஸ் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் இந்த மூவரைவிட துனித் வெல்லாலகே (11), இசித்த விஜேசுந்தர (12) ஆகியோரும் இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் நுவன் ப்ரதீப் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமிந்து விக்ரமசிங்க 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மொஹமத் நபி.

இறுதிச் சுற்று

ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தில் இரண்டு கட்டங்களைக் கொண்ட லீக் சுற்று இன்றுடன் முடிவடைந்தது.

இறுதிச் சுற்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள கோல் மார்வல்ஸ் அணிக்கும் ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது தகுதிகாண் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதே தினத்தன்று தகுதிகாண் போட்டியைத் தொடர்ந்து கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது நீக்கல் போட்டி நடைபெறவுள்ளது.

தகுதிகாண் போட்டியில் தோல்வி அடையும் அணியும்  நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணியும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாடவுள்ளன.

இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55