பூர்வீக சொத்தின் மூலம் லாபம் பெறுவதற்கான எளிய பரிகாரங்கள்...!

Published By: Digital Desk 7

16 Jul, 2024 | 10:26 PM
image

எம் மண்ணிலிருந்து அரசியல், சமூக , பொருளாதார அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அதிகம். வேறு சிலர் தங்களது நில புலன்களை விற்றுவிட்டு புலம் பெயர்ந்திருப்பார்கள்.  வேறு சிலர் தங்களது பூர்வீக நிலம் தொடர்பான சொத்து விற்பனையாவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டிருப்பர்.‌

இதற்காக பல சோதிட நிபுணர்களையும், ஆன்மீக பெரியோர்களையும் சந்தித்து ஆலோசனையும், வழிகாட்டலையும் பெற்றிருப்பர். ஆனாலும் பூர்வீக நிலம் விற்பனை- பூர்வீக சொத்தின் மூலமான பங்கு -பூர்வீக சொத்தின் ஊடாக கிடைக்க வேண்டிய லாபம் - ஆகியவை கிடைத்திருக்காது அல்லது அதில் சிக்கல்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும்.‌

இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.பூர்வீக சொத்து என்றால் அதுவும் காணி தொடர்பான சொத்து என்றால் அதற்கு எம்முடைய தாய் வழி அல்லது தந்தை வழி முன்னோர்கள் தான் சூட்சமமாக சிக்கலை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு இந்த தலைமுறையினர் மற்றும் கடந்த தலைமுறையினர் முறையான பிரீதிகளையோ அல்லது சாந்திகளையோ அல்லது திதி வழிபாட்டினையோ கடைப்பிடித்திருக்க மாட்டார்கள். இதன் காரணமாக அந்த ஆத்மா அவர்களுக்கு உரிய மண்ணை அவர்களுடைய வாரிசுகளுக்கு விட்டுத் தராமல் சூட்சமமான முறையில் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் குழப்பத்தை ஏற்படுத்துவர்.

இதன் காரணமாக உங்களுடைய விற்பனையாகாத பூர்வீக மண்- காணி  இருக்கும் இடத்தில் உங்களுடைய தாத்தா பாட்டி ஆகியோரின் புகைப்படத்தை வைத்து, அவர்களுக்கு ரோஜா பூ மாலையை சாற்றி, இரண்டு விளக்குகளை ஏற்றி, அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, ”இந்த பூமியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்'' என்று மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பரிகாரத்தை பிரார்த்தனையுடன் மேற்கொள்ளுங்கள்.

அந்த நிலம் - காணி தொடர்பான அனைத்து சிக்கல்களும் தீர்ந்து , விற்பனையாகி அதனூடாக உங்களுக்கு லாபம் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம். ஏனெனில் நீங்கள் உங்களுடைய முன்னோர்களான தாத்தா மற்றும் பாட்டியை பரிகாரத்தின் மூலம் அவர்களுக்கு அவர்களுடைய ஆத்மாவுக்கு சாந்தி ஏற்படுத்தியதே காரணம்.

வேறு சிலர் நாங்கள் வெளிநாடுகளில் வசிக்கிறோம். இங்கு சம்பாதித்த பணத்தை எம் மண்ணில் காணியை சொந்தமாக வாங்கினோம். அதனை தற்போது நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக விற்பனை செய்ய திட்டமிட்டால் அந்த காணி விற்பனையாகாமல் இழுத்தடிக்கிறது. தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்பாராத நெருக்கடிகள் உருவாகிறது. இதனால் எங்களுக்கு சொந்தமான பூமியை காணியை  நிலத்தை விற்பனை செய்ய ஏதேனும் ஒரு உபாயத்தை கூறுங்கள் என பலரும் அனுபவமிக்க ஜோதிட நிபுணர்களையும், வாஸ்து நிபுணர்களையும் அணுகி ஆலோசனையும், வழிகாட்டலையும் கேட்பர்.‌ இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்குத் தேவையான பொருட்கள் : நான்கு நாட்டுத் தக்காளி + சீரகத் தண்ணீர் +  கூரில்லாத மொன்னையான‌ கத்திரிக்கோல் நான்கு +  கண்டங்கத்திரிக்காய் நான்கு

மேலே சொல்லப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு உங்களுடைய விற்பனையாகாத மனைக்கு அல்லது கட்டிடத்திற்கு அல்லது காணிக்கு செவ்வாய்க்கிழமை அன்று செல்லுங்கள். உங்கள் காலிமனையின் அல்லது உங்களது கட்டிடத்தின் அல்லது உங்களது காணியின் நான்கு முனைப்பகுதிகளிலும் கண்டங் கத்திரிக்காயை நான்காக வெட்டி வீசி விட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து நான்கு முனைப்பகுதிகளிலும் தலா ஒரு தக்காளியை கசக்கி பிழிந்து வீச வேண்டும். அதனைத் தொடர்ந்து நான்கு முனைப்பகுதிகளிலும் சீரக தண்ணீரை தெளிக்க வேண்டும். இறுதியாக நான்கு முனைப்பகுதிகளிலும் சிறிய அளவில் பள்ளம் தோண்டி அதில் முனை மழுங்கிய கத்திரிக்கோலை வைத்து புதைத்து விட வேண்டும்.

அத்துடன் 'இந்த மனை விரைவாக விற்பனையாகி எங்களின் பொருளாதார நெருக்கடி சீராக வேண்டும்' என மனம் உருக அந்த மனையின் கிழக்கு திசை நோக்கி அல்லது உங்களுக்கு லாபத்தை தரும் திசை நோக்கி பிரார்த்திக்க வேண்டும்.‌ இதனை ஒரே ஒரு முறை பின்பற்றினால் போதும்.

இந்த பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் உங்களுடைய மனை அல்லது காணி அல்லது கட்டிடம் விற்பனை தொடர்பான சாதகமான பதில் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35