(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் றக்பி விளையாட்டு வரலாற்றில் முதல் தடவையாக றக்பி வீரர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆரம்பித்துவைத்தார்.
இதற்கு அமைய 19 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளில் இடம்பெறும் சகல றக்பி வீரர்களுக்கும் இந்த வருடத்திலிருந்து காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இஸிபத்தன கல்லூரிக்கும் இடையில் ஹெவ்லொக்ஸ் விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற றக்பி போட்டிக்கு முன்பதாக பாடசாலை றக்பி வீரர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
இந்த வைபவத்தின்போது திரித்துவ கல்லூரிக்கும் இஸிபத்தன கல்லூரிக்கும் காப்புறுதித் திட்டத்திற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன் மற்றைய பாடசாலைகளுக்கான காப்புறுதி ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாடசாலை றக்பி போட்டி ஒன்றின்போது வீரர் ஒருவர் அனர்தத்துக்குள்ளாகி பார்வை இழந்த சம்பவத்தை அடுத்தே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாடசாலை றக்பி வீரர்கள் அனைவருக்கும் காப்புறுதி அவசியம் என்பதை அண்மையில் வலியுறுத்தி இருந்தார்.
பார்வை இழந்த றக்பி வீரருக்கு அமைச்சரினால் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, றக்பி மத்தியஸ்தர்களின் மேம்பாட்டை முன்னிட்டு இலங்கை றக்பி மத்தியஸ்தர்கள் சங்கத்திற்கு 50 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது.
அத்துடன் இஸிபத்தன கல்லூரிக்கு பேத்ரிஸ் விளையாட்டு மைதானத்தை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் ஆவணமும் கல்லூரி அதிபரிடம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM