கெலாய்டு வடு பாதிப்பை அகற்றும் நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

16 Jul, 2024 | 02:41 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாகனங்களில் பயணிக்கும் போதோ அல்லது வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, தோலில் காயங்கள் உண்டாகும். உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பிறகு அந்த விபத்தால் ஏற்பட்ட காயங்கள் வடுவாக அல்லது ஆறாத தழும்பாக மாறிவிடும். 

சிலருக்கு இந்த வடு அவர்களுடைய தோலின் இயற்கையான நிறத்திற்கு எந்தவித உறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றால் அதனை அவர்கள் சாதாரணமாக கடந்து சென்று விடுவார்கள். ஆனால் அந்தக் காயங்கள் அசௌகரியத்தையும் தர்ம சங்கடத்தையும், தன்னம்பிக்கையில் பாதிப்பையும் ஏற்படுத்தினால் அதற்காக சிகிச்சை எடுக்க விரும்புவர். மேலும் சிலருக்கு இந்த காயங்களில் கெலாய்டு வடு எனும் பாதிப்பையும் அரிதாக ஏற்படுத்தக் கூடும். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

கெலாய்டு வடு என்பது சாதாரண காயங்களால் ஏற்படும் தழும்புகளை விட தடிமனாகவும், பெரிதாகவும் ஏற்படும். இத்தகைய வடுக்கள் பெரும்பாலும் 20 வயது முதல் 30 வயது உள்ள ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும். மேலும் இத்தகைய பாதிப்பு காது மடல்கள், கன்னங்கள், மார்பு பகுதி, கை, கால் ஆகிய பகுதிகளில் ஏற்படுகிறது.

மேலும்,சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஓரிடத்தில் மட்டும் இல்லாமல் பல இடங்களில் உருவாகிறது.‌ இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், உணர்வு ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இதற்கு முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

இத்தகைய கெலாய்டு வடு - உங்களுடைய உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் கொலாஜன் எனும் புரதத்தின் உற்பத்தி சமச் சீரற்ற தன்மையில் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் காயங்களால் ஏற்பட்டிருக்கும் சாதாரண தழும்புகள் மீது பூச்சிக்கடி , தீக்காயம் போன்ற பாதிப்பு ஏற்பட்டாலும், முகப்பரு மற்றும் முடி அகற்றும் சிகிச்சையின் போது ஏற்படும் சிறிய அளவிலான பக்க விளைவுகள் காரணமாகவும் இத்தகைய வடுக்கள் ஏற்படக்கூடும்.

அதே தருணத்தில் இவை தொற்று பாதிப்போ அல்லது புற்றுநோய் பாதிப்போ அல்ல என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதே தருணத்தில் இத்தகைய கெலாய்டு வடு ஹைபர்டிராபிக் வடு எனப்படும் சாதாரண காயத்தால் ஏற்படும் தழும்புகளிலிருந்து வேறுபட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய வடுக்கள் எம்முடைய மூட்டுகளில் ஏற்பட்டிருந்தால் அதனை அசைக்கும் போது பாரிய அசௌகரியமும் உண்டாகும். இதனால் இத்தகைய கெலாய்டு வடு பாதிப்பிற்கு அவசியம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வைத்தியர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் திசு பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

அதன் பிறகு அதனை அகற்றுவதற்காக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, ஊசி வடிவிலான சிகிச்சை, உறைநிலை சிகிச்சை, லேசர் சிகிச்சை, குறைந்த வீரிய திறன் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவற்றின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இத்தகைய சிகிச்சையின் மூலமும் முழுமையான நிவாரணம் கிடைக்காத போது சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர். 

வைத்தியர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-23 16:05:42
news-image

இன்ஃபிளமெட்ரி மயோஃபைப்ரோபிளாஸ்ரிக் கட்டி பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-22 16:37:00
news-image

யாரெல்லாம் கத்தரிக்காய் உண்பதை தவிரக்க வேண்டும்?

2025-04-22 15:32:32
news-image

ஹெமாஞ்சியோமா பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

2025-04-21 14:22:41
news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59
news-image

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகள்

2025-04-19 15:47:07
news-image

பெரியனல் அப்ஸெஸ் : ஆசனவாயில் ஏற்படும்...

2025-04-18 18:33:58
news-image

பூஞ்சைகளை நுகர்வதால் ஆரோக்கியம் கெடலாம்

2025-04-18 17:44:44
news-image

தர்பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கா?

2025-04-18 12:47:04
news-image

ஹைப்பர்ஸ்ப்ளெனிசம் எனும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பை...

2025-04-18 10:51:51
news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-18 12:52:24