ஜப்பானிய மலசலகூட உபகரண உற்பத்தி நிறுவனமொன்று தன்னியக்க ரீதியில் முழுமையாக சுத்திகரிப்பை மேற்கொள்ளக்கூடிய மலசலகூட உபகரணமொன்றை உருவாக்கியுள்ளது.டோரோ என்ற நிறுவனத்தால் நியோ ரெஸ்ட் என்ற இந்த தன்னியக்க மலசலகூட உபகரணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதி தொழில்நுட்ப மலசலகூட உபகரணம் ஒருவர் அதற்கு அண்மையில் வருகையில் சுயமாக தனது மூடியைத் திறந்து கொள்கிறது. அத்துடன் அது சுயமாகவே கழிவின் தன்மையயை அறிந்து முழுமையாக தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்வதுடன் உபகரணத்திலுள்ள நுண்கிருமிகளையும் அழிக்கிறது.இந்தத் தன்னியக்க மலசலகூட உபகரணத் தின் விலை 10,000 அமெரிக்க டொலராகும்.