குருணாகலில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு

16 Jul, 2024 | 01:11 PM
image

குருணாகலில் வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமங்கல - கினிமான்ன வீதியில் நாவின்ன பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (15) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சுமங்கலயிலிருந்து கினிமான்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பெண்ணும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் வாரியப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்...

2025-02-11 14:17:27
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச்...

2025-02-11 12:30:53
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-02-11 12:21:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-11 12:11:49
news-image

யோஷிதவின் பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

2025-02-11 11:57:37
news-image

நுவரெலியாவில் 4 பாகை செல்சியஸில் வெப்பம்...

2025-02-11 12:02:32