இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து சீன முகவரகத்தின் பிரதித்தலைவரிடம் விளக்கமளித்த திறைசேரி செயலாளர்

Published By: Digital Desk 3

16 Jul, 2024 | 08:47 AM
image

(நா.தனுஜா)

சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தின் பிரதித்தலைவருடனான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் கடந்த 12 - 13 ஆம் திகதிகளில் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்திக்கான உலகளாவிய நடவடிக்கை பேரவையின் இரண்டாவது உயர்மட்ட மாநாட்டின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தின் பிரதித்தலைவர் யாங் வென்குன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த திறைசேரியின் செயலாளர், பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும், உயர்வானதும் நிலையானதுமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதையும் இலக்காகக்கொண்டு அமுல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதேபோன்று சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) உள்ளடங்கலாக இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கிய சீன அரசாங்கத்துக்கும் மஹிந்த சிறிவர்தன தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திமன்றி சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின் பிரகாரம் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதில் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் இணைத்தலைமை தாங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவின் அங்கத்துவ நாடுகளுடன் இணைந்து சீனாவினால் வழங்கப்பட்ட வலுவான ஆதரவையும் திறைசேரியின் செயலாளர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

மேலும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையிலும், அதற்கு அப்பாலும் சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கும் இலங்கை மக்கள் சார்பில் அவர் நன்றியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12
news-image

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி...

2026-07-14 10:21:51
news-image

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய...

2026-07-14 10:00:06
news-image

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன்...

2026-07-14 10:47:49