(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 19ஆவது போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், 3ஆவது அணியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லிய பந்துவீச்சு, முஹம்மத் வசீம் குவித்த விவேகமான அரைச் சதம் என்பன கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸின் வெற்றியை இலகுபடுத்தின.
கோல் மார்வல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 139 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் முஹம்மத் வசீம் 50 ஓட்டங்ளையும் க்ளென் பிலிப்ஸ் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
13ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த கோல் மார்வல்ஸ் எஞ்சிய 7 விக்கெட்களை 45 ஓட்டங்களுக்கு இழந்தது.
டிம் சீஃபேர்ட் 44 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
அவர்களைவிட சதிஷ ராஜபக்ஷ 15 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 13 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மதீஷ பத்திரண 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மதீஷ பத்திரண
இதேவேளை, நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான கடைசி லீக் போட்டி செவ்வாய்க்கிழமை (16) நடைபெறவுள்ளது.
அப் போட்டியில் கண்டி பெல்கன்ஸ் வெற்றிபெற்றால் இறுதிச் சுற்றுக்கு கடைசி அணியாகத் தெரிவாகும். ஒருவேளை மிகச் சிறந்த ஓட்ட வேகத்துடன் தம்புள்ள சிக்சர்ஸ் வெற்றிபெற்றால் நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் போட்டியிலிருந்து வெளியேறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM