ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் 'ஜமா' பட டீசர்

15 Jul, 2024 | 06:23 PM
image

நாட்டுப்புற கலைகளின் ஒன்றான தெருக்கூத்து எனும் நிகழ்த்து கலையில் பங்கு பற்றும் கலைஞர் ஒருவரின் வாழ்வியலையும், அவரது லட்சியத்தையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் 'ஜமா' எனும் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி படைப்பாளிகளான கார்த்திக் சுப்புராஜ்- சீனு ராமசாமி- அஜய் ஞானமுத்து - ஆகியோருடன் மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜமா' எனும் திரைப்படத்தில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே வி என் மணிமேகலை, சூப்பர் குட் சுப்பிரமணி, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன், ஏ.கே. இளவழகன், ஜேசு ராஜ், சாரதி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லேர்ன்&  டீச் புரொடக்சன் பிரைவேட் லிமிடெட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாய் தேவானந்த் +சசிகலா +சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த 'ஜமா ' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தெருக்கூத்து என்னும் நாட்டுப்புற கலையை நிகழ்த்தி வரும் குழுவில் பெண் வேடமிடும் கலைஞரின் உணர்வும், வாழ்வியலும் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்த டீசருக்கு கலைஞர்களிடையும் அந்தக் கலையை ரசிக்கும் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right