விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் 

குறித்த வர்த்தகர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தகர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டு  நேற்று கிளிநொச்சி நீதாவன்  நீதிமன்றில்  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

காசோலை மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதும் சந்தேகநபர்  தரப்பு சட்டத்தரணியால்  இது  வட்டிக்குப் பெறப்பட்ட பணம்  இதில் பத்துவீதம் என்ற அதிகூடிய   வட்டிப்பணம் வழங்கப்பட்டு   இருப்பதாகவும், பெறப்பட்ட  முதலை விட  வட்டிப்பணம் அதிகமாக இருப்பதாகவும்  பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்  குறித்த காசோலை சந்தேகநபரின்  பெயரிலையே  வழங்கப்பட்டுள்ளமை யால்  குறித்த சந்தேக நபரை  எதிவரும்  21 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது