நடிகரும், அரசியல்வாதியுமான ஆர். சரத்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்மைல் மேன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர்கள் ஷியாம்- பிரவீண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்மைல் மேன்' எனும் திரைப்படத்தில் ஆர். சரத்குமார், இனியா, சிஜா ரோஸ், சுரேஷ் சந்திர மேனன், ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், பேபி ஆழியா, குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார். நினைவுத் திறன் இழப்பு பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவரின் புலன் விசாரணையை மையப்படுத்தி பரபர திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெட்னஸ்டே ஸ்டோரீஸ் மற்றும் மேக்னம் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சலீம் தாஸ்- அனீஸ் ஹரி தாசன் - டி. ஆனந்தன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நினைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சரத்குமாரின் திரையுலக பயணத்தில் 150 வது படமாக தயாராகி இருக்கும் 'ஸ்மைல் மேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருப்பதால்.. இதற்கு அவரது ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM