இன்றைய சூழலில் இளம் தலைமுறை சேர்ந்த பெண்களும், ஆண்களும் தங்களுடைய முகம், கை, கால்.. போன்ற உடல் உறுப்பு பகுதிகளில் விரும்பத்தகாத அளவிற்கு முடிகள் வளர்ச்சி அடைந்தால், அதனை நீக்கவே விரும்புகிறார்கள்.
இதற்காக தற்போது டிரிபிள் வேவ்லென்த் டையோடு லேசர் எனும் நவீன லேசர் சிகிச்சை அறிமுகமாகி பக்க விளைவுகளற்ற முழுமையான நிவாரணத்தை வழங்கி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
தைரொய்ட் சுரப்பி , ஹோர்மோன்கள், மாதவிடாய் சுழற்சி ஆகியவற்றில் ஏற்படும் சமசீரற்ற தன்மை காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் எம்முடைய இளம் பெண்களில் பலருக்கும் உதட்டின் மேல் பகுதி, புருவம், தாடை, கன்னம், காது, கை, அக்குள், மறைவிடம்.. என பல இடங்களில் விரும்ப தகாத அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் முடிகள் அசாதாரணமாக வளரும். இதனை நவீன மருத்துவ தொழில்நுட்பங்களாலான லேசர் சிகிச்சைகள் மூலம் முடிகள் அகற்றப்பட்டாலும்... அவை அப்பகுதியில் சிறிய அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால் தற்போது அறிமுகமாகி இருக்கும் ட்ரிபிள் வேவ்லென்த் டையோடு லேசர் எனும் நவீன லேசர் சிகிச்சை, மூன்று வெவ்வேறு அளவிலான அலைவரிசையில் தோளின் அடிப்பகுதி வரை சென்று முடி அகற்றும் பணியில் ஈடுபடுகிறது. இதனால் விரும்பத்தகாத இடங்களில் இருக்கும் முடி முற்றிலுமாகவும், நிரந்தரமாகவும் அகற்றப்படுகிறது. இதனால் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து தங்களுடைய பணித்திறனை மேம்படுத்திக் கொள்வதுடன் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொள்கிறார்கள். மேலும் இத்தகைய லேசர் சிகிச்சையின் போது வலி ஏற்படுவதும் மிக குறைவு என்பதால் பயனாளிகளின் விருப்ப தெரிவாக இந்த நவீன லேசர் சிகிச்சை திகழ்கிறது.
வைத்தியர் தீப்தி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM