சுப பலன்களை அள்ளித்தரும் சந்திர கேந்திரங்கள்...!?

15 Jul, 2024 | 04:58 PM
image

எம்மில் பலரும் தங்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக சோதிட நிபுணர்களை அணுகுவது இயல்பு. அவர்களும் எம்முடைய ஜாதகத்தை லக்னம்- திசா- புத்தி- கிரகங்களின் சேர்க்கை - அதிபதி - உள்ளிட்ட பல விடயங்களை கணக்கிட்டு துல்லியமாக அவதானித்து எதிர்காலத்தில் உங்களுடைய பயணம் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒரு வழிகாட்டுதலை வழங்குவர். 

அவரின் வழிகாட்டுதல் சிலருக்கு பிடிக்காது. சிலருக்கு புரியாது. சிலருக்கு தெரியாது. ஏனெனில் நாம் என்னவாக வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டத்தினை எமக்குள் நிர்ணயித்திருப்போம். அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டினை சோதிட நிபுணர்கள் வலியுறுத்தும் போது நாம் சோதிட நிபுணர்களின் வாக்கு குறித்து ஐயம் கொள்ளத் தொடங்குகிறோம். இந்த தருணத்தில் அனுபவமிக்க சோதிடர்கள் நீங்களே உங்களது ஜாதகத்தை எளிதாக அவதானித்துக் கொள்ள ஒரு வழிமுறையை எடுத்துரைக்கிறார்கள். அதுதான் சந்திர கேந்திரங்கள். 

சந்திர கேந்திரங்கள் என்றால் உங்களுடைய நாளாந்த வாழ்க்கையின் செயல் திட்டத்தின் பிரதிபலிப்பு என குறிப்பிடலாம்.  அதாவது உங்களுடைய ராசி குறிப்பாக சந்திரன் நின்ற ராசியிலிருந்து ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் ராசி கட்டங்கள் தான் சந்திர கேந்திரங்கள் என வகைப்படுத்தப்படுகிறது. இந்த நான்கு கட்டங்களில் சுப கிரகங்களான குரு -புதன்- சுக்கிரன்- போன்ற கிரகங்கள் இருந்தால்.. உங்களுக்கு இந்த சுப கிரகங்கள் தொடர்பான வேலைகளும்.‌ வாழ்க்கையும் அமையும் என்கிறார்கள்.‌  

உதாரணமாக நீங்கள் மிதுன லக்னம் - கும்ப ராசியாக இருக்கிறீர்கள் என்றால்.. உங்களின் ராசி கட்டத்திலிருந்து அதாவது கும்ப ராசி கட்டத்திலிருந்து கும்ப வீடு, நான்காம் இடமான ரிஷப வீடு, ஏழாம் இடமான சிம்ம வீடு, பத்தாம் இடமான விருச்சிக வீடு ஆகிய இடங்களில் புதன்- சுக்கிரன்- குரு - போன்ற சுப கிரகங்கள் இருந்தால், உங்களுடைய இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். மிதுன லக்னம் என்பதால் அடிப்படையில் புத்திசாலியான நீங்கள் வாழ்க்கை முழுவதும் புத்திசாலித்தனத்தாலேயே வழிநடத்திச் செல்வீர்.  புத்திசாலித்தனம் உங்களுக்கு எப்போதும் கை கொடுக்கும். ஐம்பது வயதிலும் அல்லது புதிய சூழலிலும் உங்களால் ஒரு விடயத்தை புதிதாக கற்றுக்கொண்டு, அதில் வருவாயை ஈட்ட முடியும். இந்த வலிமையை சந்திர கேந்திரங்கள் உங்களுக்கு வழங்குகிறது. 

திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் மண மகனாக இருந்தாலும் அல்லது மண மகளாக இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்தையும், சந்திரன் நின்ற வீட்டின் 1, 4 ,7 ,10 ஆகிய வீடுகளில் சுப கிரகங்கள் தனித்தோ சேர்க்கைப் பெற்றோ இருக்கிறதா..! என அவதானியுங்கள். அப்படி இருந்தால் தாராளமாக அவர்களை பொருத்தமான வரனாக தெரிவு செய்யலாம்.  

ஆணாக இருந்தாலும்.. பெண்ணாக இருந்தாலும்.. சந்திர கேந்திர வலிமை பெற்றால் அவர்களின் இல்வாழ்க்கை சிறக்கும். ஆயுள் முழுவதும் இவர்களுடைய மனம் புதிய சூழல் எதுவாக இருந்தாலும் அதனை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.‌ அதே தருணத்தில் சந்திர கேந்திரங்களுக்கு ஒன்று நான்கு ஏழு பத்து ஆகிய வீடுகளில் ராகு, கேது, சனி ஆகியவை இருந்தால் அவற்றை தவிர்க்கலாம்.  சந்திர கேந்திரங்களில் எந்த சுப கிரகமும் இல்லை என்றாலும்.. கேந்திர ஸ்தானங்களை எந்த கிரகம் பார்வையிடுகிறது என்பதனை பொறுத்து உங்களுக்கான சுப பலன்கள் கிட்டும். 

லக்னம் மற்றும் லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலும், சந்திர கேந்திரம் வலிமையாக இருந்தால்.... அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பதை மனதில் திருத்திக் கொள்ளுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33
news-image

வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சித்தர்கள் வழங்கிய...

2024-08-23 20:09:49
news-image

சகல கர்மா தோஷங்களையும் நீக்கும் எளிய...

2024-08-21 17:45:17