கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!

15 Jul, 2024 | 04:40 PM
image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் உரிமையாளர் உட்பட இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51
news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,604 பேர்...

2025-03-20 11:02:33
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

ஊடகவியலாளர் நிலாந்தன் தமிழரசுக் கட்சியில் போட்டி!

2025-03-20 10:57:14
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33